Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீண்டும் வருகிறது நொக்கியாவின் 3310 கையடக்க தொலைபேசி

In தொழில்நுட்பம்
Published: 11:47 GMT, Feb 20, 2017 |
0 Comments
1163
icon_com
This post was written by : Vithushagan
Nokia-3310

நொக்கியா 3310 கையடக்க தொலைபேசியின் புதிய  வெளியீடு குறித்த புதிய காட்சியை அதிகாரப்பூர்வமாக நொக்கியா  இணையத்தளத்தில்  பதிவு செய்துள்ளது.

இம்மாத இறுதியில் நோக்கியாவின் புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட இருக்கிறது, நொக்கியா P1, நொக்கியா D1C, நொக்கியா 5 மற்றும் நொக்கியா 3 என பல்வேறு ஸ்மார்ட் தொலைபேசிகள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

HMD குளோபல் சார்பில் எத்தனை நொக்கியா ஸ்மார்ட்தொலைபேசி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது என இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வழங்கப்படவில்லை.

இந்நிலையில் ஸ்மார்ட் தொலைபேசி மட்டுமில்லாமல் பீச்சர்போன்களையும் எச்எம்டி குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது என தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து பல்வேறு தகவல்கள் பழைய நோக்கியா 3310 பீச்சர் போன் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டது.

அந்த வகையில் நோக்கியா 3310 புதிய டீஸர் வீடியோ நொக்கியா தொலைபேசி யூட்ரீயுப் சேனலில் பதிவு செய்யப்பட்டுள்ளது ,மொத்தம் 04.13 நிமிடங்கள் கொண்ட வீடியோ ‘உன்னை எனது பழைய நொக்கியா 3310 போன்று காதலிக்க வேண்டும்’ (I wanna love you like my Nokia 3310) என்ற தலைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் பழைய நொக்கியா 3310 உடன் இன்றைய ஸ்மார்ட் தொலைபேசிகளுடன் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளன, எனினும் இந்த வீடியோ மீண்டும் பழைய நோக்கியா 3310 புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்படுவது குறித்து எவ்வித தகவலும் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg