Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அணித்தலைமையிலிருந்து தோனியை நீக்கியமை அபாயகரமானது: அசாருதீன்

In கிாிக்கட்
Updated: 07:00 GMT, Feb 21, 2017 | Published: 06:58 GMT, Feb 21, 2017 |
0 Comments
1893
This post was written by : Elakkiya

ஐ.பி.எல் அணிகளில் ஒன்றான ரைசிங் புனே சூப்பர் ஜியன்ட் அணியின் தலைமைப் பதவியிலிருந்து தோனியை நீக்கியமை அபாயகரமானது என இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அசாருதீன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘ புனே அணி நிர்வாகத்தின் இந்த முடிவு மிகவும் இழிவானது. இந்திய கிரிக்கெட் அணியின் தங்கமாக திகழ்ந்தவர் தோனி. சுமார் 8 முதல் 9 வருடங்களாக அணித்தலைவர் பதவியில் சாதனை படைத்துள்ளார். நாங்கள் பணம் செலவிடுகின்றோம். அணியை நடத்துபவர்கள் நாங்கள்தான் என்று புனே அணியின் உரிமையாளர்கள் கூறலாம்.

அதேவேளையில் தலைமை பதவியில் இருந்து நீக்குவதற்கு முன்னதாக தோனியின் தகுதியையும், திறமைகளையும் நம்பகத்தன்மையையும் சீர்தூக்கி பார்த்திருக்க வேண்டும்.

இரக்கமே இல்லாமல் அணித்தலைவர் பதவியிலிருந்து தோனியை நீக்கியமை முன்னாள் கிரிக்கெட் வீரர் என்ற வகையில் எனக்கு ஆத்திரத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது” என்று கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg