Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.பி.எல் 2017: 500 ரூபாவிலிருந்து 2.5 கோடிக்கு உயர்ந்தது ஊதியம்

In கிாிக்கட்
Updated: 10:03 GMT, Feb 21, 2017 | Published: 10:03 GMT, Feb 21, 2017 |
0 Comments
7396
icon_com
This post was written by : Elakkiya
mohammed-siraj-pti_806x605_41487612430

பெற்றோருக்காக ஹைதராபாத் பகுதியில் வீடு வாங்க வேண்டும் என்பதே விருப்பம் என்று ஐ.பி.எல் வீரர்கள் ஏலத்தில் 2.6 கோடி ரூபாவுக்கு சன்றைஸஸ் ஹைதராபாத் அணியில் தெரிவாகியுள்ள இந்திய வீரர் மொஹமட் சிராஜ் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் கிரிக்கட் போட்டிகளில் தனது அற்புத திறமையை வெளிப்படுத்தியதன் மூலம் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஐ.பி.எல் வீரர்கள் ஏலத்தில் 2.6 கோடி ரூபாவுக்கு மொஹமட் சிராஜ் தெரிவு செய்யப்பட்டார்.

இது குறித்து கருத்து தெரிவித்த சிராஜ், ‘ இன்று என்னுடைய கிரிக்கட் வாழ்க்கையின் முதல் சம்பளத்தை நினைவுபடுத்திப் பார்க்கின்றேன். அது ஒரு கழக போட்டியாக இருந்தது. என்னுடைய மாமா அணித்தலைவராக இருந்தார். 25 ஓவர் போட்டியில் 20 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்களை நான் கைப்பற்றினேன். இதற்காக என்னுடைய மாமா மிகவும் மகிழ்ச்சியடைந்தார். 500 ரூபா பரிசுப் பணத்தினையும் பெற்றுக் கொண்டார். அன்றைய நாள் மிகவும் சிறந்த ஒரு உணர்வை அனுபவித்தேன். இன்று 2.6 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. உணர்வற்று இருக்கின்றேன்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ‘தந்தை கார் சாரதியாக பணிபுரிகிறார். குடும்பத்தின் நிதி சார்ந்த அழுத்தங்கள் என்னையும் எனது தம்பியையும் பாதிக்காதவாறு இத்தனை வருடங்களாகவும் பணியாற்றுகின்றார். எனக்காக சிறந்தவற்றை பெற்றுக் கொடுக்கும் பெற்றோர்களுக்காக வீடு வாங்குவதற்கு விரும்புகின்றேன்.’ என்றும் மொஹமட் சிராஜ் குறிப்பிட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg