Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மன்னாரில் பெருமளவான ‘கேரள கஞ்சா’ போதைப்பொருள் மீட்பு

In இலங்கை
Published: 13:04 GMT, Feb 21, 2017 |
0 Comments
1132
icon_com
This post was written by : Ravivarman
4

தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி  பயணித்த நபரிடம் சுமார் 2 கிலோ கிராம் எடை கொண்ட கேரள கஞ்சாப்பொதியினை மன்னார் போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் நேற்று இரவு (திங்கட்கிழமை) மீட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பேரூந்தை தாராபுரம் பிரதான வீதியில் இடை மறித்து சோதனையிட்ட பொலிஸாரால் பேசாலையைச் சேர்ந்த நபர் ஒருவரின் உடமையில் இருந்து கேரள கஞ்சாப்பொதி கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த இளைஞரிடம் மேற்கொண்ட மேலதிக  விசாரணைகளின் போது வீட்டில் பதுக்கி வைத்திருந்த மேலும் 38 கிலோ கஞ்சாப்பொதிகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.  மீட்கப்பட்ட 40 கிலோ கஞ்சாப்பொதிகள் சுமார் 40 இலட்சம் ரூபாய் பெறுமதி வாய்ந்தவை என தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தற்போது மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதில் பொலிஸார் அசமந்த போக்குடன் செயற்பட்டு வருவதாக ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். அண்மையில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர் கஞ்சாப் பொதியொன்றை விற்பனைக்காக தென்பகுதிக்கு கொண்டுசெல்ல முற்பட்டபோது கைது செய்யப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg