Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போர்ட்ஸ்மவுத்தில் வெடிகுண்டு கண்டெடுப்பு: படகு மற்றும் ரயில் சேவைகள் பாதிப்பு

In
Updated: 08:19 GMT, Feb 22, 2017 | Published: 08:18 GMT, Feb 22, 2017 |
0 Comments
1227
icon_com
This post was written by : Elakkiya
_94790635_afa3da80-4548-45d3-8215-7e70313498b5

இரண்டாம் உலகப்போர் காலத்திற்கு உரியதாக கருதப்படும் வெடிக்காத குண்டு ஒன்று இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத் (Portsmouth)  துறைமுகத்தில் நீருக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து படகுகள் மற்றும் ரயில் சேவைகள் யாவும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேற்படி வெடிபொருள் இன்று அதிகாலை துறைமுகத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக ரோயல் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து போர்ட்ஸ்மவுத் மற்றும் Southsea ரயில் நிலையத்திற்கு இடைப்பட்ட ரயில் சேவைகள் யாவும் ரத்து செய்யப்பட்டதுடன் போர்ட்ஸ்மவுத் துறைமுக அனைத்து படகு சேவைகளும் நிறுத்தப்பட்டது.

அதுமட்டுமின்றி குறித்த பகுதியை அண்மித்த வீதிகள் சிலவும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி வெடிபொருள் 226 கிலோ எடை உடைய சக்திவாய்ந்த வெடிபொருள் என்றும் இது ஜேர்மனியின் SC 250 என்று நம்பப்படுவதாகவும் ரோயல் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg