Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாடு முழுவதும் 50 சூரியஒளி மின் உற்பத்தி பூங்காக்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

In இந்தியா
Updated: 10:47 GMT, Feb 22, 2017 | Published: 10:46 GMT, Feb 22, 2017 |
0 Comments
1091
icon_com
This post was written by : Shailu
Piyush Goyal

நாடு முழுவதும் சூரியஒளி மின் உற்பத்தியின் மூலம் 50 பூங்காக்கள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை இன்று (புதன்கிழமை) கூடியது. இந்த கூட்டத்தில் பல்வேறு விவகாரங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது.

அதில், நாடு முழுவதும் கூடுதலாக 50 சூரியஒளி மின் உற்பத்தி பூங்காக்கள் அமைக்க மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இது குறித்து மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கருத்த தெரிவிக்கையில்,

“சூரியஒளி மின் உற்பத்தி கொள்ளளவை 20 ஆயிரம் மெகாவோட்டில் இருந்து 40 ஆயிரம் மெகாவோட்-ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி 500 மெகாவாட் கொள்ளளவு கொண்ட 50 சோலார் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளது.

விவசாயம் செய்யப்படாத நிலங்கள் இத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும். ரூ.8,100 கோடியில் 2020க்குள் சோலார் பூங்கா அமைந்தால் வேலைவாய்ப்புகள் பெருகும்.

மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்த விருப்பமுள்ள மாநிலங்களுக்கு 30% வரை நிதியுதவி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg