Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பவேரியா மாநிலத்தில் ‘பர்தா’ அணிவதற்கு தடை

In ஐரோப்பா
Updated: 12:01 GMT, Feb 22, 2017 | Published: 12:01 GMT, Feb 22, 2017 |
0 Comments
1176
icon_com
This post was written by : Elakkiya
19439682_303

ஜேர்மனியின் பவேரியா மாநில அரசு இஸ்லாமிய பெண்கள் முகத்தைமூடி அணியும் பர்தாவுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி அரச பணியிடங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் வாகனம் செலுத்தும்போது பெண்கள் ‘பர்தா’ அணிவதற்கு குறித்த மாநில அரசு தடை விதித்துள்ளது.

இது குறித்து பவேரியா உள்துறை அமைச்சர் தெரிவிக்கையில், ‘ தொடர்பாடல் என்பது மொழி ஊடாக மாத்திரமே நடைபெறுவதில்லை. முகபாவங்கள், சைகைகள் ஊடாகவும் நடக்கிறது. இஸ்லாமிய பெண்கள் முகத்தை மூடுவது உள்ளூர் கலாசாரத்தை மீறுவதாக உள்ளது.

மேலும், இந்த விடயத்தில் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்வது போன்ற சமூதாயத்தின் அடிப்படையும் அடங்கியுள்ளது’ என தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியில் மிகவும் பழமைவாதத்தை கடைப்பிடிக்கும் மாநிலமான பவேரியா மாநிலத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இடம்பெற்ற இரண்டு தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து பர்த்தாவுக்கு மாநிலம் முழுவதும் தடை விதிப்பது என முன்மொழியப்பட்டது.

இந்த முன்மொழிவுக்கு ஜேர்மனிய அதிபர் அங்கெலா மெர்க்கலும் ஆதரவளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg