Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐரோப்பாவுடன் பிரித்தானியா சிறப்பான உறவுகளை பேணவேண்டும்: மக்ரோன்

In
Updated: 12:35 GMT, Feb 22, 2017 | Published: 12:35 GMT, Feb 22, 2017 |
0 Comments
1200
icon_com
This post was written by : Elakkiya
macron

பிரெக்சிற்றுக்கு பின்னர் ஐரோப்பாவுடன் பிரித்தானியா இடைவெளிகளை ஏற்படுத்திக் கொள்ள கூடாது என பிரான்ஸ் ஜனாதிபதி வேட்பாளர் இமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

லண்டனில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற பரப்புரையில் இமானுவல் மக்ரோன் மேற்படி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘ பிரான்ஸின் ஆறாவது நகரம் லண்டன் என்றும் பிரான்ஸ் மக்கள் அதிகளவில் வாழும் லண்டன் நகரம் உலகில் ஆறாவது மிகப்பெரிய பிரான்ஸ் நகரம் என்றும் பிரித்தானிய வெளியுறவு செயலாளர் பொரிஸ் ஜோன்ஸன் தெரிவித்திருந்தார். அது உண்மையே. எமது நாட்டின் விதியை வெளிப்படுத்தப்போவது பிரான்ஸின் ஆண்களும் பெண்களுமே. பிரான்ஸ் வரலாற்றில் ஒரு தீர்க்கமான தருணத்தில் நாம் இருக்கின்றோம். அதனால் இங்கு நான் பேசுவது முக்கியமானது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிரெக்சிற் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த மக்ரோன், ‘ ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுச்சந்தை ஐரோப்பாவின் பாதுகாப்பு ஆகும். பிரெக்சிற் பேச்சுவார்த்தை சிறப்பாக இல்லை என்றால் நாம் அனைவரும் வலுவிழந்துவிடுவோம். அதன்பின்னர் நிச்சயமாக பிரான்ஸ் நலன்களை நாம் பாதுகாக்க வேண்டும். அத்துடன் எங்களுடைய மதிப்புக்கள், திறமைகளையும் பாதுகாக்க வேண்டும். எனவே இந்த சூழ்நிலையில் பிரித்தானியாவுடன் துல்லியமான சமநிலையான உறவை பேண வேண்டும்’ என்றும் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg