Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

களுத்துறை படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16ஆக அதிகரிப்பு

In இலங்கை
Published: 17:17 GMT, Feb 22, 2017 |
0 Comments
1324
icon_com
This post was written by : Vithushagan
ff-2

களுத்துறை  கட்டுகுருந்தை கடற்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த படகு விபத்தில் பலியான 13 வயதான பெண் பிள்ளையொன்றின் சடலம் இன்று (புதன்கிழமை) மாலை கரையொதுங்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, இன்று பிற்பகல் 23 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் சடலமும் மீட்கப்பட்டது பேருவளை – மரதான கடற்கரைப் பகுதியில் குறித்த சடலம் கரையொதுக்கியிருந்தது.இதுதவிர, இன்று காலை 7 மற்றும் 25 வயது மதிக்கத்தக்க ஆண்களின் சடலங்களும் கரையொதுங்கியமை குறிப்பிடத்தக்கது.

பேருவளை கடற்பிரதேசத்திலுள்ள தேவாலயம் ஒன்றிற்கு சென்று திரும்பியபோது கடந்த திங்கட்கிழமை கட்டுக்குறுந்த பகுதியில் குறித்த படகு விபத்திற்குள்ளாகியிருந்தது. எண்ணிக்கைக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச்சென்றமையே இவ் விபத்திற்கு காரணம் என கண்டறியப்பட்டதையடுத்து, படகின் உரிமம் ரத்துசெய்யப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg