Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அதிகாரப் பகிர்விற்கு ஐ.ம.சு.முன்னணியும் ஆதரவு! – லக்ஷ்மன் கிரியெல்ல

In இலங்கை
Published: 02:52 GMT, Feb 23, 2017 |
0 Comments
1121
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் அதிகாரப் பகிர்வை ஆதரிக்கின்றது எனவும் அதன் ஆதரவுடன் விரைவில் வழிநடத்தல் குழுவின் அரசியலமைப்பு குறித்த இடைக்கால அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் எனவும் சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

நேற்றைய (புதன்கிழமை) நாடாளுமன்ற அமர்விலேயே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார்.

தமிழ் மக்கள் கோரிய மொழி உரிமைக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்காத காரணத்தை மையப்படுத்தியே ஏனைய பிரச்சினைகள் உருவெடுத்தன என சுட்டிக்காட்டிய அமைச்சர் லக்ஷ்மன், மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களும் இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லையென இதன்போது குறிப்பிட்டார்.

இந்நிலையில், தற்போது இரு பிரதான கட்சிகளும் கைகோர்த்துள்ளமையானது பிரச்சினையை தீர்ப்பதற்கு கிடைத்துள்ள வரலாற்று சந்தர்ப்பம் என்றும் சிறுபான்மை மக்களின் பிரச்சினையை தீர்க்கும் பொறுப்பு அவர்கள் நம்பி வாக்களிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு உண்டு எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg