Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெயாவின் மரணம் தொடர்பில் விசாரிக்கப்பட்டால் சிறையில் இருப்பவர்கள் ஆயுள் கைதிதான்: மு.க.ஸ்டாலின்

In இந்தியா
Updated: 05:01 GMT, Feb 23, 2017 | Published: 05:00 GMT, Feb 23, 2017 |
0 Comments
1169
icon_com
This post was written by : Shailu
Stalin

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் முறையான விசாரணை மேற்கொள்ளப்பட்டால், பெங்களூர் சிறையில் இருப்பவர்கள் ஆயுள் கைதிகளாகவே இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் ஜனநாயகப் படுகொலை நடைபெறுவதாகக் கூறி, அதனைக் கண்டித்து தி.மு.க சார்பில் மாநிலம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.

இதில் திருச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவிக்கையில்,

‘எதிர்கால சந்ததியினர் நலமுடன் வாழ தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டும். அந்தவகையில், தமிழகத்தைக் காப்பாற்றும் கடமை தி.மு.கவுக்கு உண்டு.

தி.மு.க ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்படும்.ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக முறையாக விசாரிக்கப்பட்டால், பெங்களூர் சிறையில் இருப்பவர்கள் ஆயுள் கைதியாகவே இருக்க வேண்டிய நிலை ஏற்படும்

மேலும் கட்சி சார்பற்று போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு அனைவருக்கும் என்னுடைய நன்றி.’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg