Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாவனா கடத்தல்: முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் சரணடைந்தார்

In சினிமா
Published: 11:16 GMT, Feb 23, 2017 |
0 Comments
1148
icon_com
This post was written by : Vithushagan
3FF2C41D-1C37-45B6-8938-33A0604A246F_L_styvpf

நடிகை பாவனா கேரளாவில் கடத்தப்பட்டு பாலியல் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள  நிலையில், முக்கிய குற்றவாளியான சுனில் என்ற ’பல்சர் சுனில்’ தலைமறைவாகியிருந்த நிலையில் அவர் இன்று (வியாழக்கிழமை) எர்ணாகுளம்  நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

பிரபல நடிகை பாவனா தமிழில் சித்திரம் பேசுதடி, தீபாவளி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் முன்னணி  நடிகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 17ஆம் திகதி இவர் திருச்சூரில் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டு விட்டு கார் மூலம் கொச்சி நோக்கி சென்று  கொண்டிருந்தார். அந்த காரை சாரதியான மார்ட்டின் என்பவர் ஓட்டினார். பாவனாவின் காரை ஒரு கும்பல் வழிமறித்தது. அந்த  கும்பலை சேர்ந்த பிரபல ரவுடி சுனில் உள்பட 5 பேர் காரில் ஏறி நடிகை பாவனாவிடம் பாலியல் கொடுமை செய்து அதை  செல்போனிலும் படம்பிடித்தனர்.

 நடிகை பாவனா இயக்குனர் லால் உதவியுடன் இதை பொலிஸ் உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றார். பொலிஸ்  அதிரடி நடவடிக்கை எடுத்து இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக சாரதி மார்ட்டினை கைது செய்தனர். மேலும்  கோவையில் பதுங்கி இருந்த சுனிலின் நண்பர்கள் 2 பேரை கைது செய்தனர்.

முக்கிய குற்றவாளியான சுனில் அவரது நண்பர்கள் மணிகண்டன், விஜேஷ் ஆகிய 3 பேரை பிடிக்க பொலிசார் தீவிர  நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்நிலையில் சுனில் கொச்சி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg