Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விஜய் சேதுபதியின்`கவண்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

In சினிமா
Published: 11:44 GMT, Feb 23, 2017 |
0 Comments
1128
icon_com
This post was written by : Vithushagan
7D751C86-17EC-4470-9E3D-3865D913F081_L_styvpf

கடந்த காலங்களில் விஜய் சேதுபதி நடிப்பில் அதிகளவிலான படங்கள் வெளியாகியிருந்தன ஆனாலும் இந்த வருடம் தொடங்கி 2  மாதங்கள் முடிந்தும் விஜய் சேதுபதி நடிப்பில் எந்த படமும் வெளியாகாத நிலையில் கவண் என்ற படத்தை எதிரும் மார்ச் மாதம் 31ஆம் திகதி வெளியிட படக்குழு  முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும்  படம் ‘கவண்’.இன்றைய சமூக சூழலுக்கு ஏற்ற படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் இயக்குனர் நடிகர் டி.ராஜேந்தர் முக்கிய  கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.

விஜய்சேதுபதி ஜோடியாக மடோனா செபாஸ்டின் நடித்துள்ளார். பாண்டியராஜன்,  விக்ராந்த், ‘அயன்’ ஆகாஷ், போஸ் வெங்கட் ‘நண்டு’ ஜகன், பவர் ஸ்டார் உள்பட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

ஏ.ஜி.எஸ். எண்டர்டைன் மெண்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் இப்படத்தை தயாரித்துள்ளளார். இப்படத்திற்கு  ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.

8680A9DC-89DE-4238-969F-FB6847D2A303_L_styvpf

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg