Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நேர்மையான அரசியலை செய்வதற்கு அனைவரது அர்ப்பணிப்பும் அவசியம்: ஜனாதிபதி

In இலங்கை
Published: 12:51 GMT, Feb 23, 2017 |
0 Comments
1095
icon_com
This post was written by : Vithushagan
9d159a5b3efc3559fb40ffd922f8af8e_XL

கட்சியின் பொறிமுறையை புதிய தோற்றத்துடன் முன்கொண்டு சென்று நேர்மையான அரசியலை முன்னெடுப்பதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்குமிடையில் ஜனாதிபதி மாளிகையில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

குறித்த சந்திப்பில் தற்போதைய அரசியல் நடவடிக்கைகள் மற்றும் மாகாண அபிவிருத்தி நடவடிக்கைகளின் வினைத்திறனை மேம்படுத்தல் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. தொகுதி அமைப்பாளர்கள் இது தொடர்பான தமது கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் முன்வைத்தனர்.

தற்போதைய அரசியல் சூழலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொறுப்புக்களை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு கூட்டாகச் செயற்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் முன்னாள் பிரதமர் தி.மு.ஜயரத்ன, அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா ஆகிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக்க. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர, மாகாண ஆளுநர்கள், மாகாண முதலமைச்சர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg