Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெற்றிக்கிண்ணத்துடன் நாடு திரும்பிய இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!

In கிாிக்கட்
Updated: 05:03 GMT, Feb 24, 2017 | Published: 05:03 GMT, Feb 24, 2017 |
0 Comments
1526
This post was written by : Anojkiyan

அவுஸ்ரேலிய மண்ணில் ரி-ருவென்ரி தொடரை கைப்பற்றி இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை நாடு திரும்பிய இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தை வந்தடைந்த உபுல் தரங்க தலைமையிலான இலங்கை அணி வீரர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு, ரசிகர்களின் பலத்த கரகோஷத்துடன் வரவேற்பு வழங்கப்பட்டது.

மூன்று போட்டிகள் கொண்ட ரி-ருவென்ரி தொடரில், பங்கேற்க அவுஸ்ரேலியா சென்றிருந்த இலங்கை அணி, 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.

மேலும், முதல் இரு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய பங்கு வகித்த அசேல குணரட்ன அவ் இவிரு போட்டிகளிலும், ஆட்டநாயன் விருதை பெற்றபோது, தொடர் நாயகன் விருதையும் அவர் தட்டிச்சென்றார்.

vik

vik 1

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg