Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொலிஸாருக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கண்ணீர்ப்புகை பிரயோகம்

In ஐரோப்பா
Updated: 07:26 GMT, Feb 24, 2017 | Published: 07:22 GMT, Feb 24, 2017 |
0 Comments
1262
icon_com
This post was written by : Sylviya
07 - 1

கறுப்பின ஆண் ஒருவர் பரிஸ் பொலிஸாரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரான்ஸில் நேற்று (வியாழக்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலைக் கட்டுக்கு கொண்டு வரும் வகையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகையை பிரயோகித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

De la Nation  எனும் இடத்தில் நடத்தப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், சுமார் 16 பாடசாலைகளை வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், அவர்கள் அருகில் இருந்த குப்பைகளுக்கு தீ மூட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தியோ (Theo) என அழைக்கப்படும் கறுப்பின ஆண் ஒருவர் கடந்த 02 ஆம் திகதி பொலிஸாரால் கடுமையாக தாக்கப்பட்டு பின்னர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நான்கு பொலிஸார் தற்போது பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

07 - 2
07 - 3
07 - 4
Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg