Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தீவிரவாதத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இங்கிலாந்தில் ஒருவர் கைது

In
Updated: 08:13 GMT, Feb 24, 2017 | Published: 08:09 GMT, Feb 24, 2017 |
0 Comments
1334
This post was written by : Sylviya

தீவிரவாதத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில், நேற்று (வியாழக்கிழமை) ஹீத்ரோ விமான நிலையத்தில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 26 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளின் போது, அவர் துருக்கியில் இருந்து இங்கிலாந்துக்கு வந்துள்ளார் எனவும் அவருக்கு அங்கு நிரந்தர வதிவிட முகவரி ஒன்று இல்லை எனவும் தெரியந்துள்ளது.

மேற்கு மிட்லன்ட் தீவிரவாத எதிர்ப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

சந்தேகநபர் தற்போது மேற்கு மிட்லன்ஸில் உள்ள பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg