Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சசிகலாவிற்கு முதலமைச்சர் பதவியை ஏன் வழங்க வில்லை: மனம் திறக்கிறார் ஆளுநர்

In இந்தியா
Updated: 12:14 GMT, Feb 24, 2017 | Published: 11:51 GMT, Feb 24, 2017 |
0 Comments
1941
This post was written by : Surenth

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவிற்கு தீர்ப்பு வெளிவர இருந்தமையினால் அவரை தமிழக ஆட்சியை அமைக்குமாறு அழைப்பு விடுக்கவில்லையென தமிழக பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

“கடந்த 45 ஆண்டு கால எனது அரசியல் வாழ்க்கையில் நான் பல்வேறு சர்ச்சைகளையும், சம்பவங்களையும் சந்தித்துள்ளேன். ஆனால், தமிழகத்தில் கடந்த கால நடவடிக்கைகள் போல, முந்தைய கால பணிகள் இந்த அளவுக்கு கவனிக்கப்பட்டதோ விமரிசிக்கப்பட்டதோ இல்லை.

சசிகலாவை முதல்வர் பதவியேற்க அழைப்பு விடுக்காததற்கு, சொத்துக் குவிப்பு வழக்கில் அப்போது உச்ச நீதிமன்றம் அளிக்கவிருந்த தீர்ப்பு ஒன்றுதான் காரணம்.

நான் எடுத்த நடவடிக்கைகளும் பலதரப்பினராலும் வரவேற்கப்பட்டது. சசிகலா மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதி அல்ல. அதே சமயம், உச்ச நீதிமன்றம் ஒரு வார காலத்துக்குள் தீர்ப்பை வழங்குவதாகவும் அறிவித்துவிட்டது.

இந்த சூழ்நிலையில், முடிவு எடுக்கும் முன், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருப்பதே சிறந்தது என்று நினைத்தேன்” என குறித்த ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg