Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீனாவுடன் ஒத்துழைப்புக்களை மேம்படுத்த விரும்பும் இத்தாலி ஜனாதிபதி

In ஐரோப்பா
Updated: 12:16 GMT, Feb 24, 2017 | Published: 12:08 GMT, Feb 24, 2017 |
0 Comments
1169
icon_com
This post was written by : Elakkiya
ita

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இத்தாலிக்கு சீனா முக்கிய பங்காளி என இத்தாலி ஜனாதிபதி செர்ஜியோ மட்டரெல்லா (Sergio Mattarella) தெரிவித்துள்ளார்.

சீன தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று (வியாழக்கிழமை) வழங்கிய விசேட நேர்காணலின் போதே இத்தாலி பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘சீனா- இத்தாலி உறவுகள் மிகவும் சிறப்பாக உள்ளது. அத்துடன் இவ்விரு நாடுகளும் மிகவும் பயனுள்ள விரிவான மூலோபாய கூட்டுறவை நிறுவியுள்ளது. எங்களுடைய பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள் பெருமளவு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் தொடர்ந்து புதிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

கலாசார பிரிவில் எங்களுடைய ஒத்துழைப்புக்கள் மிகவும் சாதகமான மற்றும் முக்கியமாக பங்கு வகிக்கின்றது. இவ்வாறு இரு நாடுகளும் தமது ஒத்துழைப்புக்களை மேம்படுத்துவதற்கு பெருமளவான காரணங்கள் உண்டு. இரு நாடுகளிலும் சிறந்த எதிர்கால வாய்ப்புக்கள் உண்டு என்று நான் நினைக்கின்றேன்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சீனாவினால் முன்னெடுக்கப்பட்டுள்ள ‘One Belt, One Road’  முயற்சியில் பங்கெடுக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg