Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘எம்.ஜி.ஆர், அம்மா, தீபா பேரவை’ உதயம்: சசிக்கு எதிரான ஆட்டத்தை ஆரம்பித்தார் தீபா

In இந்தியா
Updated: 06:01 GMT, Feb 25, 2017 | Published: 05:52 GMT, Feb 25, 2017 |
0 Comments
1395
This post was written by : Risha

எம்.ஜி.ஆர், அம்மா, தீபா பேரவை என்ற பெயரில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவின் புதிய அமைப்பு உதயமாகியுள்ளது.

அதன்படி குறித்த அமைப்பின் அலுவலக திறப்பு விழாவும், கொடி அறிமுக விழாவும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த தினமான நேற்றைய தினம் மாலை (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.

பேரவை அலுவலகமானது சென்னை தியாகராய நகரிலுள்ள தீபாவின் இல்லத்தின் கீழ் தளத்தில் திறந்து வைக்கப்பட்டது.  அதனை தொடர்ந்து பேரவையின் பெயர், கொடி, நிர்வாகிகள் அறிமுகம் என்பன இடம்பெற்றன.

கறுப்பு, சிவப்பு நிறங்களுக்கு நடுவே வெள்ளை நிற வட்ட வடிவில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் செங்கோலை தாங்கி பிடித்திருக்கும் வகையிலான உருவம் பொறிக்கப்பட்ட வகையில் பேரவையின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய பேரவை தொடங்கி, அரசியல் களத்தில் இறங்கிய தீபாவுக்கு அவருடைய ஆதரவாளர்களும், நிர்வாகிகளும் பூச்செண்டு கொடுத்தும், பொன்னாடை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தனர்.

ஜெயலலிதாவின் மறைவை அடுத்து அ.தி.மு.க இன் பொதுச் செயலாளராக சசிகலா தெரிவு செய்யப்பட்டதை கடுமையாக விமர்சித்திருந்த தீபா, தன்னுடைய அரசியல் பிரவேசம் தொடர்பில் தீவிரமாக சிந்தித்து வந்தார். இந்நிலையில் ஜெயலலிதாவின் பிறந்த தினமான நேற்று இந்தப் பேரவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg