Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அடுத்த போட்டியில் அவுஸ்ரேலிய அணிக்கு நிச்சயம் அழுத்தம் கொடுப்போம்: கோஹ்லி

In கிாிக்கட்
Updated: 11:16 GMT, Feb 25, 2017 | Published: 11:15 GMT, Feb 25, 2017 |
0 Comments
1251
icon_com
This post was written by : Elakkiya
virat-kohli-interview-bcci_806x605_71488018437

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் பந்திலிருந்து அவுஸ்ரேலிய அணிக்கு அழுத்தங்களை கொடுப்போம் என இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

இந்திய மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையில் புனேயில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் 333 ஓட்டங்களால் அவுஸ்ரேலியா அபார வெற்றிபெற்றது.

இந்த போட்டியின் தோல்வி குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே விராட் கோஹ்லி மேற்படி தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘ கடந்த இரண்டு ஆண்டுகளில் மிகவும் மோசமான துடுப்பாட்டமாக இது அமைந்துள்ளது. என்ன தவறு இருக்கின்றது என்பதை பார்க்க வேண்டும். போட்டி முழுவதும் எம்மை அழுத்ததில் வைத்து வெற்றி கொண்டுள்ளனர். எங்களை விடவும் சிறப்பாக ஆடுகளத்தை பயன்படுத்தினர். ஸ்டீவ் ஓ கீஃவ் சிறப்பான பந்து வீச்சாளர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg