Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிழக்கு சீன விடுதியில் தீ: 02 பேர் உயிரிழப்பு, 14 பேர் காயம்

In உலகம்
Updated: 11:36 GMT, Feb 25, 2017 | Published: 11:36 GMT, Feb 25, 2017 |
0 Comments
1167
icon_com
This post was written by : Sylviya
14

கிழக்கு  சீனாவின் நன்சாங் பகுதியில் உள்ள விடுதியில் இன்று (சனிக்கிழமை) ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விடுதி பொதுமக்கள் வாழும் குடியிருப்புத் தொகுதயிலேயே அமைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து உள்ளூர் நேரப்படி 12 மணியளவில் ஏற்பட்டதாகவும் சுமார் 30 நிமிடங்களின் பின்னர் குறித்த தீ கட்டுக்கு கொண்டு வரப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், விடுதிக்குள் சிக்குண்டுள்ள மக்களை காப்பாற்றும் பொருட்டு தீயணைப்பு படையினர் தொடர்ந்தும் முயற்சித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தை தொடர்ந்து குறித்த பகுதியில் உள்ள 300 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பு நோக்கம் கருதி வேறு இடத்திற்கு வெளியேற்றப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தீயை அணைக்கும் பொருட்டு சுமார் 160 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டதாகவும் 19 தீயணைப்பு எஞ்சின்கள் மற்றும் பல அம்பூலன்ஸ் வண்டிகள் பயன்படுத்தப்பட்டதாகவும் அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg