Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் குதிக்கவுள்ள ம.தி.மு.க.

In இந்தியா
Updated: 11:49 GMT, Feb 25, 2017 | Published: 11:49 GMT, Feb 25, 2017 |
0 Comments
1179
This post was written by : Risha

மத்திய அரசை கண்டித்து எதிர்வரும் 28ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் குதிக்கவுள்ளதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகாடு அருகே உள்ள நெடுவாசல் உள்ளிட்ட 13 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசினால் ஆய்வு அனுமதி வழங்கப்பட்டுள்ளமையை எதிர்த்தே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

தமிழகத்தின் நிலவளத்தையும், நீர்வளத்தையும் நாசமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்படவுள்ளது.

காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் நாசகாரத் திட்டத்திற்கு, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அனுமதி வழங்கி, தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த தி.மு.க. அரசு ஒப்புதல் அளித்து, கடந்த 2011ஆம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

ஆனால், மக்கள் கொந்தளிப்பாலும், விவசாயிகளின் கடும் எதிர்ப்பாலும் குறித்த திட்டமானது பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டது.

ஆனால், கடந்த பிப்ரவரி 15ஆம் திகதி மத்திய அமைச்சரவை, மீத்தேன் திட்டத்தையே ஹைட்ரோ கார்பன் திட்டமாகச் செயற்படுத்த தீர்மானித்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg