Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெள்ளை மாளிகை விருந்து நிகழ்வில் கலந்து கொள்ளப்போவதில்லையென ட்ரம்ப் அறிவிப்பு

In
Published: 06:05 GMT, Feb 26, 2017 |
0 Comments
1231
This post was written by : Anojkiyan

அமெரிக்க வெள்ளை மாளிகையில், எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடக்க திட்டமிடப்படப்பட்டிருந்த நிருபர்கள் ஆணையத்தின் ஆண்டுவிழா விருந்து நிகழ்வில், தான் கலந்து கொள்ளப்போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மாறாக, அனைவருக்கும் இனிய மாலை வணக்கத்தை தெரிவித்து விடுங்கள் என தனது டுவிட்டர் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் வழக்கமான பாரம்பரியத்தை ட்ரம்ப் மீறுவதாக பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

முன்னதாக அமெரிக்காவின் முன்னணி செய்தி நிறுவனங்கள் வெள்ளை மாளிகையினுள் செய்தி சேகரிக்க தடை விதித்து உத்தரவிட்டதன் பின்னணியில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடக்கும் இந்த விருந்தில் அமெரிக்க ஜனாதிபதி மற்றும் பல்வேறு ஹொலிவுட் பிரபலங்கள் கலந்து கொள்வர். முதல் முறையாக இந்த விருந்து வொஷிங்டன் டிசியில் 1920ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இந்த ஆண்டின் விருந்து ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி நடைபெற திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg