Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிம் ஜொங்- நம்மின் கொலை: வட. கொரியா ஒத்துழைக்கா விட்டால் சட்ட நடவடிக்கை

In
Published: 07:15 GMT, Feb 26, 2017 |
0 Comments
1295
icon_com
This post was written by : Anojkiyan

வடகொரிய தலைவர் கிம் ஜொங்- உன்னின் சகோதரர் கிம் ஜொங்- நம்மின் கொலை வழக்கில் வடகொரியா தூதரக அதிகாரி, ஒத்துழைப்பு தராவிட்டால், அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மலேசியா அறிவித்துள்ளது.

நம்மின் கொலை வழக்கில், மலேசியாவின் சந்தேகப்பார்வை தற்போது வடகொரியா மீது விழுந்துள்ள நிலையில், வடகொரியாவை சேர்ந்த 8 பேரிடம் விசாரணை நடத்த மலேசிய பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.

இது தொடர்பாக மலேசிய உயர் பொலிஸ் அதிகாரி அப்துல் சமா மாட் நேற்று (சனிக்கிழமை) நிருபர்களிடம் கூறும்போது,

“இந்த வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதாக தூதரக அதிகாரி ரி ஜொங் கோல் நேரில் ஆஜராக அவகாசம் வழங்கப்படும். ஆனால் அவர் தகுந்த ஒத்துழைப்பு தராவிட்டால், மலேசிய சட்டத்தின்படி அவர் ஆஜராவதை கட்டாயப்படுத்தி நோட்டீஸ் அனுப்பப்படும்.

அப்படியும் அவர் ஆஜராகாவிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கையாக அவரை கைது செய்வதற்கு நீதிமன்றம் மூலம் பிடியாணை பிறப்பிக்கப்படும்” என்று குறிப்பிட்டார்.

கடந்த பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி கோலாலம்பூர் விமான நிலையத்தில் விஷத் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த கிம் ஜொங்-நம்னின் மரணத்தில் தொடர்ந்து பல மர்மங்கள் நீடித்து வந்த நிலையில், கிம் ஜொங்- நம் வடகொரியாவை சேர்ந்த முகவர்களினாலேயே கொல்லப்பட்டதாக தற்போது தென்கொரிய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg