Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

களுத்துறை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் – காரைதீவு உத்தியோகத்தர் உயிரிழப்பு

In இலங்கை
Updated: 11:58 GMT, Feb 27, 2017 | Published: 11:38 GMT, Feb 27, 2017 |
0 Comments
1253
This post was written by : Vithushagan

களுத்துறையில் சிறைக் கைதிகளை ஏற்றிச் சென்ற வாகனத்தின்மீது இன்று (திங்கட்கிழமை) காலை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அம்பாறை காரைதீவு கிராமத்தைச் சேர்ந்த சிறைச்சாலை உத்தியோகத்தரான  சிவானந்தம் தர்மீகன் உயிரிழந்துள்ளார்.

இவர் சமீபத்தில்தான் அரசாங்க அலுவலராக நியமனம் பெற்று சேவையில் இணைந்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் மேலும் ஒரு சிறைச்சாலை அதிகாரி உயிரிழந்துள்ளார். அத்துடன் மூன்று அதிகாரிகள் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

களுத்துறை சிறைச்சாலையில் இருந்து கடுவலை நீதவான் நீதிமன்றத்திற்கு பாதாள உலகத் தலைவர் ஒருவர் உட்பட கைதிகளை அழைத்துச் செல்லும் போது சிறைச்சாலையில் இருந்து 500 மீற்றர் தூரத்தில் வைத்து இனந்தெரியாத நபர்களால் சிறைச்சாலை பேரூந்து மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது பாதாள உலக குழு தலைவர், இரு சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg