Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

களுத்துறை சம்பவத்துக்கு பொலிஸாரே பொறுப்புக் கூற வேண்டும்: டீ.எம்.சுவாமிநாதன்

In இலங்கை
Updated: 15:59 GMT, Feb 27, 2017 | Published: 15:59 GMT, Feb 27, 2017 |
0 Comments
1392
This post was written by : Vithushagan

களுத்துறை சிறைச்சாலை பேருந்து மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்திற்கு பொலிஸாரே பொறுப்புக் கூற வேண்டும் என, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

பாரிய குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய நபர்கள் இன்று (திங்கட்கிழமை) சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படுவதால், பாதுகாப்பளிக்குமாறு நேற்றையதினமே பொலிஸாரிடம் கோரப்பட்டிருந்ததாகவும் ,   உத்தியோகத்தர்கள் பற்றாக்குறை காரணமாக, பொலிஸார் அந்தக்        கோரிக்கையை நிராகரித்ததாக அமைச்சரால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொலிஸார் பாதுகாப்பு வழங்கியிருந்தால், துப்பாக்கி பிரயோகத்தை தடுத்திருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.எதுஎவ்வாறு இருப்பினும், இந்த விடயம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள மூவரடங்கிய குழுவை நியமிக்க சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg