Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறந்த அணித்தலைவருக்கான விருதை தட்டிச்சென்றார் கோஹ்லி

In கிாிக்கட்
Updated: 03:09 GMT, Feb 28, 2017 | Published: 03:08 GMT, Feb 28, 2017 |
0 Comments
1162
icon_com
This post was written by : Risha
Kohli-post-australia

இவ்வாண்டிற்கான சிறந்த அணித் தலைவருக்கான விருது, இந்திய கிரிக்கட் அணித் தலைவர் விராட் கோஹ்லிக்கு வழங்கப்பட்டுள்ளது.

கிரிக்கட் இணையதளமான இ.எஸ்.பி.என்.கிரிக் இன்போ சார்பில் ஆண்டுதோறும் சிறந்த கிரிக்கட் வீரர்கள் தெரிவுசெய்யப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்படுவது வழக்கம். அதன்படி, 2016-17ஆம் ஆண்டிற்கான சிறந்த அணித்தலைவராக கோஹ்லிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

டெஸ்ட் போட்டியில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை குவித்ததை தொடர்ந்தே அவர் இந்த விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடரில் 198 பந்துகளில் 258 ஓட்டங்களை குவித்த இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் சிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரராகவும், அதே போட்டித் தொடரில் 3ஆவது டெஸ்ட் போட்டியில் 17 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்திய இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் சிறந்த டெஸ்ட் பந்து வீச்சாளராகவும் தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg