Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீண்டும் தேசிய அணிக்கு திரும்பும் முயற்சியில் ஷமி

In விளையாட்டு
Updated: 05:58 GMT, Feb 28, 2017 | Published: 04:16 GMT, Feb 28, 2017 |
0 Comments
1177
This post was written by : Risha

உள்ளூர் போட்டியில் உடற்தகுதியை நிரூபித்து மீண்டும் தேசிய அணிக்கு திரும்புவதற்கான முழு முயற்சிகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஷமி தெரிவித்துள்ளார்.

அதன்படி விஜய் ஹசாரா ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பெங்கால் அணி சார்பில் இறுதி இரு போட்டிகளில் விளையாடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியின் போது ஹமி, உபாதைக்கு உள்ளானார். தற்போது அவர் குணமடைந்துள்ளார்.

எனினும், உபாதைக்கு உள்ளான நிலையில் வீரரொருவர் அணியிலிருந்து விலகினால், அதன் பின்னர் அவர் உள்ளூர் போட்டியில் விளையாடி உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும் என இந்திய தேசிய அணியின் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, தற்போது வலைப்பயிற்சியில் ஈடுபட்டுவரும் ஷமி, விஜய் ஹசாரே தொடர் மூலம் உடற்தகுதியை நிரூபித்து இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்க திட்டமிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg