Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வீதிகளின் பெயர்களுடன் சேர்ந்துள்ள ஜாதிப்பெயர்களை நீக்க உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல்

In இந்தியா
Updated: 07:21 GMT, Feb 28, 2017 | Published: 06:51 GMT, Feb 28, 2017 |
0 Comments
1110
icon_com
This post was written by : Elakkiya
high_court_madurai_2436434f

தமிழகத்தில் வீதிகளின் பெயர்களுடன் சேர்த்து குறிப்பிடப்படும் ஜாதிப்பெயர்களை நீக்கவேண்டும் என்று உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி கல்லுக்குழியைச் சேர்ந்த பொன். தம்பபாலா என்பவர் மேற்படி மனுவை உயர்நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனுவில், ‘தமிழகத்தின் சாலைகள் மற்றும் தெருக்களில் ஜாதியை சுட்டிக்காட்டும் பெயர்கள் இருக்குமானால் அவை நீக்கப்படும் என்று கடந்த 1978ஆம் ஆண்டு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், இன்றும் பல இடங்களில் ஜாதிப்பெயர்கள் பாவனையிலுள்ளன. குறிப்பாக அரசால் வழங்கப்படும் பல ஆவணங்களில் குறிப்பிடப்படும் வீதியின் பெயர்கள் ஜாதிப்பெயர்களுடன் எழுதப்படுகின்றன. எனவே நீதிமன்றம் தலையிட்டு தெருக்களின் பெயர்களை ஜாதிப்பெயர்களுடன் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிடவேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த மனுவை நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றின் மதுரைக் கிளை, தமிழக தலைமைச் செயலர், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலர்கள் ஆகியோருக்கு அறிவித்தல் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. அத்துடன் விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg