Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீண்டும் தி.மு.க.வில் இணைந்தார் ராதாரவி

In இந்தியா
Updated: 09:32 GMT, Feb 28, 2017 | Published: 08:59 GMT, Feb 28, 2017 |
0 Comments
1071
icon_com
This post was written by : Ravivarman
ratha

நடிகரும் அரசியல்வாதியுமான ராதாரவி, செயல்தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) தி.மு.க.வில் இணைந்துள்ளார்.

செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அவர் ‘திமுகவில் சேர்ந்ததில் மகிழ்ச்சி. நீண்ட காலமாகவே இது குறித்து நான் வாகை சந்திரசேகரிடம் கலந்து ஆலோசித்து வந்தேன். என்னுடைய தாயின் துக்கத்தில் ஸ்டாலின் கலந்துகொண்டு எங்களுக்கு ஆதரவாக இருந்தார். தாயின் நினைவு நாளில் தி.மு.க.வில் சேர்ந்துள்ளேன். என்னுடைய தாய்க்கழகத்திற்கு  மீண்டும் வந்ததில் மகிழ்ச்சியடைகின்றேன்’ எனத் தெரிவித்தார்.

மேலும் ‘தற்போது எதிர்கட்சியாக இருக்கும் தி.மு.க. வருங்காலத்தில் ஆளும் கட்சியாக மாறும். எதிர்காலத்தில் தி.மு.க மட்டும் தான் இருக்கும். தமிழகத்தில் தற்போது தகுதியுள்ள தலைவர் யாரும் இல்லை. ஸ்டாலினால் மட்டுமே நல்ல தலைவராக இருக்க முடியும்’ என மேலும் குறிப்பிட்டிருந்தார்.

முன்னர் தி.மு.க.வில் தீவிரமாக செயற்பட்டு வந்த ராதாரவி பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி அ.தி.மு.க.வில் நீண்ட காலமாக இணைந்திருந்தார். 2002-2006 காலப்பகுதியில் சைதாப்பேட்டை அ.தி.மு.க. சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகவும் பதவி வகித்திருந்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg