Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெங்களூர் சிறையில் சசிகலாவை சந்தித்த தமிழக அமைச்சர்கள்

In இந்தியா
Updated: 09:45 GMT, Feb 28, 2017 | Published: 09:40 GMT, Feb 28, 2017 |
0 Comments
1128
icon_com
This post was written by : Elakkiya
201702281356418184_TN-Ministers-meets-sasikala-in-bangalore-jail_SECVPF

சொத்துக் குவிப்பு வழக்கில்  பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவை செங்கோட்டையன் உள்ளிட்ட நான்கு தமிழக அமைச்சர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

விமானம் மூலம் இன்று காலை பெங்களூர் சென்ற செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், செல்லூர் ராஜூ ஆகியோர் தமிழக அரசியல் நிலைமை குறித்து சசிகலாவுக்கு தெரியப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்கள் சசிகலாவை சந்திப்பதற்காக சென்றிருந்த போதிலும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg