Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஏறாவூர் நகரத்தை அழகாக மாற்ற வேண்டும்: அலிஸாஹிர் மௌலானா

In இலங்கை
Updated: 11:44 GMT, Feb 28, 2017 | Published: 11:29 GMT, Feb 28, 2017 |
0 Comments
1101
icon_com
This post was written by : Surenth
Alishageer Maulana 02

ஏறாவூர் நகரத்தை அடுத்த சந்ததிக்கு அழகான நகரமாக ஒப்படைக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியின் ஏறாவூர் நகரப் பகுதியை அபிவிருத்தி செய்வது தொடர்பான விஷேட கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஏறாவூர் நகர பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நகரத்தை அபிவிருத்தி செய்யும்போது பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களுக்கு அரசாங்கம் நஷ்டஈடு வழங்காது.

எனவே நகரை அபிவிருத்தி செய்வதில் அனைவரது ஒத்துழைப்பும் அவசியமாக உள்ளது. இந்த அபிவிருத்தித் திட்டங்களுக்கு எதிராக நீதிமன்றம் சென்றாலும் அது சாத்தியமாக அமையாது.

வீதியின் இரு மருங்கிலும் உள்ள கடைகள், வீடுகள் மற்றும் பல்வேறு கட்டடங்கள் இதன்போது உடைக்கப்படும். ஆகவே குறித்த அபிவிருத்தி திட்டத்திற்கு அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கின்றோம்.

வீதி விபத்துக்கள் அற்ற இயற்கையான நகரத்தை அமைக்க எல்லோரது ஒத்துழைப்பும் அவசியம். எனவே இதற்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்.

அனைத்து சமூக, கலாசார, பண்பாட்டு விழுமியங்களைக் கொண்ட மக்களும் இன ஒற்றுமையோடு வாழ்ந்த பாரம்பரியம் ஏறாவூருக்கு உண்டு. இத்தகைய சிறப்பு மிக்க ஏறாவூரை அடுத்த சந்ததிக்கு அழகான நகரமாக நாம் ஒப்படைக்க வேண்டும்” என இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Alishageer Maulana 02 Alishageer Maulana 03 Alishageer Maulana 04 Alishageer Maulana 05 Alishageer Maulana 06 Alishageer Maulana 07

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg