Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரண்டாம் உலகப் போர் காலத்திற்குரிய வெடிக்காத குண்டு கண்டெடுப்பு: மேற்கு லண்டனில் பரபரப்பு

In
Updated: 10:19 GMT, Mar 3, 2017 | Published: 10:18 GMT, Mar 3, 2017 |
0 Comments
1289
This post was written by : Sylviya

இரண்டாம் உலகப் போர் காலத்திற்குரிய வெடிக்காத குண்டு ஒன்று மேற்கு லண்டனில் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த பகுதியை பல பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.

சுமார் 227 கிலோ கிராம் எடை கொண்ட குறித்த குண்டு நேற்று (வியாழக்கிழமை) Brondesbury Park  இல் உள்ள The Avenue  எனும் பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கண்டெடுக்கப்பட்ட குண்டு காரணமாக அருகில் உள்ள மக்கள் வேறு இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதுடன், அந்த பகுதியில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் ரயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குண்டு கண்டெடுக்கப்பட்ட பகுதியில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரம் வரை பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் 100 மீட்டர் தூரம் வரை பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள் குறித்த குண்டை பாதுகாப்பாக செயலிழக்கச் செய்யும் பொருட்டு மும்முரமாக பணியில் ஈடுபட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg