Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வட கொரிய அச்சுறுத்தலை தென் கொரியாவில் சந்திக்கத் தயாராகிறது அமெரிக்கா

In
Updated: 17:17 GMT, Mar 7, 2017 | Published: 17:14 GMT, Mar 7, 2017 |
0 Comments
1174
This post was written by : elayathambi

வடகொரியா நேற்று நடத்திய ஏவுகணைச் சோதனையை அடுத்து அமெரிக்கா தனது உயர் ரக ஏவுகணை எதிர்ப்புப் பாதுகாப்பு நிலைகளை தென் கொரியாவில் இன்று நிறுவி இருக்கிறது. அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய பாதுகாப்புக் கட்டளை இவ் விடயத்தை அறிவித்துள்ளது.

வட கொரியாவின் நேற்றைய ஏவுகணைப் பரீட்சிப்பானது, அதன் அதிபர் கிம் யொங்க் உன்னின் நேரடிக் கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட்டதாக வட கொரிய அரச ஊடகம் அறிவித்திருந்தது. இப் பரீட்சிப்பின் போது ஏவுகணைகள் ஜப்பானில் உள்ள அமெரிக்க தளங்களை இலக்காகக் கொண்டிருந்ததாகவும் குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.

620 மைல் தாண்டக்கூடிய இவ் ஏவுகணைகளில் மூன்று ஜப்பான் கடல் பகுதி அருகே வீழ்ந்தமை குறிப்பிடத் தக்கது. வடகொரியாவின் இந்தப் பரீடசிப்புக் குறித்து தாம் ஆய்வு செய்து வருவதாகவும், அது குறித்த பதிலை விரைவில் அறிவிப்போம் என்றும் நேற்று தென் கொரியா தெரிவித்திருந்தது.

தென்கொரியா சொல்ல விரும்பிய பதிலை அமெரிக்க இன்று அந்த மண்ணில் செய்து காட்டியிருப்பதாகவே  அங்கு அமெரிக்கா இன்று நிறுவியுள்ள உயர் ரக ஏவுகணை எதிர்ப்புப் பாதுக்காப்பு நடவடிக்கைகளைக் கணிக்க முடிகிறது.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg