Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு பிரத்தியேக இடம் வேண்டும்: மஹிந்த அமரவீர

In இலங்கை
Updated: 05:19 GMT, Mar 8, 2017 | Published: 04:12 GMT, Mar 8, 2017 |
0 Comments
1226
This post was written by : Ravivarman

நாட்டில் தற்போது எதற்கெடுத்தாலும் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் முன்னெடுக்கப்படுவதால் அவற்றிற்கென தனியான ஓர் இடத்தினை ஏற்பாடு செய்யவேண்டும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்-

“ஒவ்வொரு நாளும் ஏதோவொரு விடயங்களை வலியுறுத்தி போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தும் ஓர் வழமை தற்போது உருவாகியுள்ளது. இந்தப் போராட்டங்களின் காரணமாக அப்பாவி பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

எனவே இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் போராட்டங்கள் தொடர்பான செய்திகளை ஊடகங்கள் ஏழு நாட்களுக்கு பிரசுரிக்காது நிறுத்தினால் போராட்டங்கள் நடைபெறாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg