Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

பாடசாலைகளின் ஆளணி மற்றும் பௌதிகவளங்களின் அபிவிருத்திக்கு நடவடிக்கைகள்: பிரதமர்

In இலங்கை
Published: 06:10 GMT, Mar 24, 2017 |
0 Comments
1247
This post was written by : Ravivarman
az ranil

நாட்டின் அனைத்துப் பாடசாலைகளிலும் ஆளணி மற்றும் பௌதிக வளங்களை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளார்.

காலி, நாகொட றோயல் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு பிரதமர் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘நாடெங்கிலும் உள்ள பத்தாயிரத்து 161 பாடசாலைகளில் ஏழாயிரம் கல்விக்கூடங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன. அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற வேலைத்திட்டத்தின் கீழ் அபிவிருத்திப் பணிகள் இடம்பெறுகின்றன.

ஜி.சி.ஈ. சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களில் 50 சதவீதமானவர்கள் சித்தி பெறத் தவறுகிறார்கள். இதற்கு தீர்வாக தொழிற்சந்தையை இலக்காக வைத்து 26 புதிய பாடங்கள் அறிமுகம் செய்யப்படும்.

மேலும் எந்த குறைபாடுகள் இருந்தாலும் பாடசாலைகளில் பரிசளிப்பு விழாக்கள் தவறாமல் நடைபெற வேண்டும். இதன்மூலம் மாணவர்கள் ஊக்கம் பெறுவார்கள். அதனால் அவர்களின் கல்வியின் வளர்ச்சி மட்டம் அதிகரித்துச் செல்லும்.

அத்துடன் தற்காலத்தில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், அனுபவம் வாய்ந்த அதிபர்கள் ஆகியோருக்கு வெற்றிடங்கள் நிலவுகின்றன. இதன் காரணமாக மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள். இதற்கு விரைவில் தீர்வு காணப்படும்’ என பிரதமர் மேலும் தெரிவித்தார்.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.