Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திருமாவளவன், வேல்முருகன் உள்ளிட்டோருக்கு எதிராக, யாழ்ப்பாணத்திலும் முல்லைத்தீவிலும் ஆர்ப்பாட்டம் (3ஆம் இணைப்பு)

In இலங்கை
Updated: 11:56 GMT, Mar 29, 2017 | Published: 07:49 GMT, Mar 27, 2017 |
0 Comments
2545
icon_com
This post was written by : Varshini

வடபகுதியிலுள்ள ஈழத்துக் கலைஞர்களால் யாழ்ப்பாணத்தில் இன்று பிற்பகல் முன்னெடுக்கப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தின் தொடர்ச்சியாக முல்லைத்தீவிலும் ஆர்ப்பாட்டம் ஒன்று  முன்னெடுக்கப்பட்டது.

jaff (4) jaff (8) jaff (2) jaff (1)

‘மஹிந்தவுக்கு கரங்கொடுத்தவர்களுக்கு தலைவனை தடுக்க என்ன தகுதியுண்டு?’ (2ஆம் இணைப்பு)

நடிகர் ரஜினிகாந்தின் ஈழத்து விஜயம் ரத்தாவதற்கு காரணமாக அமைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோருக்கு எதிராக யாழ். நல்லூர் முன்றலில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நூற்றுக்கணக்கான ஈழத்து கலைஞர்களும் ஆயிரக்கணக்கான  மக்களும்  ஒன்றிணைந்து இக் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

‘கலைஞனை கலைஞனாக வாழ விடு’, ‘மஹிந்தவுக்கு கரம் கொடுத்த உங்களுக்கு தலைவனை தடுக்க என்ன தகுதி உண்டு?’, ‘திருமாவளவா வேல்முருகா ஈழத் தமிழர்களை வைத்து பிழைப்பு நடத்தாதே’, சுயநலவாதிகளே ஈழத் தமிழர்கள் விடயத்தில் தலையிடாதே’ போன்ற சுலோகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு கலைஞர்கள் இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கலைஞர்களை அரசியல்வாதிகளாக பார்க்காமல் அவர்களை சுயமாக இயங்கவிடுமாறு இதன்போது கலைஞர்கள் கேட்டுக்கொண்டனர்.

jaffna protest (2) jaffna protest (1) jaffna protest (4)

இதேவேளை நடிகர் ரஜினிகாந்தின் ஈழத்து விஜயத்தை அரசியலாக்கி, அதனை ரத்து செய்யும் நடவடிக்கைக்கு காரணமான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோருக்கு எதிராக முல்லைத்தீவிலும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு நகரப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான இளைஞர்கள் கலந்துகொண்டு திருமாவளவன் மற்றும் வேல்முருகனுக்கு எதிராக தமது கண்டனங்களை வெளியிட்டனர்.

திருமாவளவன் – வேல்முருகனை கண்டித்து ஈழத்தில் பாரிய ஆர்ப்பாட்டம்

நடிகர் ரஜினிகாந்தின் ஈழத்து விஜயத்திற்கு முட்டுக்கட்டையாக அமைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோரை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

ஈழத்து கலைஞர்களால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள குறித்த ஆர்ப்பாட்டம், யாழ்.நல்லூர் முன்றலில் இன்று (திங்கட்கிழமை) மாலை 3 மணிக்கு இடம்பெறவுள்ளது.

லைக்கா ஞானம் அறக்கட்டளை நிறுவனத்தினர் சார்பில், வடக்கில் அமைக்கப்பட்ட வீடுகளை கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் அழைக்கப்பட்டிருந்த நிலையில், திருமாவளவன் மற்றும் தி.வேல்முருகன் உள்ளிட்டோரின் வற்புறுத்தல் காரணமாக குறித்த விஜயம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனை பகிரங்க அறிக்கை மூலம் வெளிப்படுத்தியுள்ள ரஜினிகாந்த், தாம் ஈழத்தில் கால்பதிக்க ஆவலுடன் காத்திருந்ததாகவும் எதிர்காலத்தில் இவ்வாறான சந்தர்ப்பங்கள் அமைந்தால் அவற்றையும் அரசியலாக்கி தன்னை தடுத்து விட வேண்டாமென்று கோரிக்கையும் விடுத்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் இலங்கை விஜயத்தை திருமாவளவன், வேல்முருகன் உள்ளிட்டோர் அரசியலாக்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதோடு, நடிகர் ரஜினிகாந்த் இலங்கைக்கு வரவேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைக்கவுள்ளதாக ஈழத்துக் கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg