Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்காகவே கோஹ்லி ஓய்வு எடுத்தார்: பிரட் ஹொட்ஜ்

In கிாிக்கட்
Updated: 11:45 GMT, Mar 27, 2017 | Published: 10:58 GMT, Mar 27, 2017 |
0 Comments
1456
icon_com
This post was written by : Elakkiya
virat-kohli-injury-bcci_806x605_41489762631 (1)

ஐ.பி.எல் தொடரில் விளையாடுவதற்காகவே அவுஸ்ரேலிய அணியுடனான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி விளையாடவில்லை என குஜராத் லயன்ஸ் அணியின் பயிற்சியாளர் பிரட் ஹொட்ஜ் அதிர்ச்சிக் கருத்தொன்றை வெளியிட்டுள்ளார்.

பிரபல பத்திரிகை ஒன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியில் பிரட் ஹொட்ஜ் மேற்படி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “தோள்பட்டை காயம் காரணமாக அவுஸ்ரேலியாவுடனான கடைசி டெஸ்ட் போட்டியில் கோஹ்லி விளையாடாமைக்கு அடுத்த மாதம் ஆரம்பமாகும் ஐ.பி.எல். தொடரே காரணம். ஒரு விளையாட்டு வீரராக அவருக்கு ஏற்பட்டிருப்பது பாரதூரமான காயம் என்றே நினைக்கத் தோன்றுகின்றது. குஜராத் லயன்ஸ் அணியின் பயிற்சியாளராக நானும் அதை நம்புகின்றேன்.

இரண்டு வாரங்களில் ஐ.பி.எல். தொடர் ஆரம்பமாகவுள்ளது. ஆரம்ப போட்டிகளில் கோஹ்லி விளையாட முடியாது. மாறாக எதிர்வரும் 5ஆம் திகதி நடைபெறவுள்ள ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டேவிட் வோர்னர் தலைமையிலான சன்றைஸஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் விராட் விளையாட முடியும் என்றால் அது அவருடைய சிந்தனையை வெளிப்படுத்தும்.

கோஹ்லி மட்டுமல்ல முன்பு வேறு சில வீரர்களும் இவ்வாறு செய்துள்ளனர். ஏனெனில் இது பணமழை தொடர். கோஹ்லிக்கு நிறைய பணம் வழங்கப்படுகின்றது” என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg