Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனடாவில் மரிஜூவானா போதைப்பொருள் சட்டபூர்வமாக்கப்படும்!

In கனடா
Updated: 11:45 GMT, Mar 27, 2017 | Published: 11:45 GMT, Mar 27, 2017 |
0 Comments
1136
icon_com
This post was written by : Elakkiya
pot-protest-20160420

கனடாவில் மரிஜூவானா போதைப்பொருளை சட்டபூர்வமாக்குவது குறித்த புதிய சட்டமூலம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் லிபரல் அரசினால் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்த புதிய சட்டமூலமானது கனேடிய தினமான ஜூலை முதலாம் திகதிமுதல் அமுல்படுத்தப்படும் வகையில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலத்தின் பிரகாரம், ஒட்டாவாவில் மரிஜூவானா விற்பனைக்கு உரிமம் பெற வேண்டும் என்றும் கூறப்படுகின்றது. அதேவேளை மரிஜூவானா போதைப் பொருளை விநியோகிப்பது அல்லது விற்பனை செய்வது எவ்வாறு என்பதை முடிவு செய்யும் உரிமை மாகாணங்களுக்கு இருப்பதாகவும், மாகாண அரசே விலையை நிர்ணயிக்க முடியும் என்றும் கூறப்படுகின்றது.

எவ்வாறிருப்பினும், மரிஜூவானா போதைப் பொருளின் வழங்கல்கள் பாதுகாப்பானது என்பதை உறுதி செய்யும் பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg