Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சர்ச்சைகளுக்கு மத்தியில் கைச்சாத்தானது ஹைட்ரோ காபன் திட்டத்திற்கான ஒப்பந்தம்

In இந்தியா
Updated: 11:51 GMT, Mar 27, 2017 | Published: 11:33 GMT, Mar 27, 2017 |
0 Comments
1196
This post was written by : Shailu

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், நாடு முழுவதிலுமுள்ள 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான திட்டம் டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) கையெழுத்தாகியுள்ளது.

ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறைவேற்றும் நிறுவனங்களுடனான இவ் ஒப்பந்தத்தில் மத்திய பெற்றோலிய வளத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கையெழுத்திட்டுள்ளார்.

இதன்படி 31 இடங்களில் 22 நிறுவனங்கள் ஹைட்ரோகார்பன் இயற்கை எரிவாயுவை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய பெற்றோலிய வளத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கருத்து தெரிவிக்கையில்,

“இத்திட்டத்திற்கு யாரும் பயப்பட தேவையில்லை. தமிழக மக்களின் அச்சத்தை போக்கிய பிறகே ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறைவேற்றப்படும். ஆனால் இத்திட்டம் எக்காரணம் கொண்டும் கைவிடப்பட மாட்டாது.

நெடுவாசல் மக்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்வதோடு, பெற்றோலிய வளத்துறை அதிகாரிகள் விரைவில் தமிழகம் வந்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg