Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மூன்று மொழிகளில் வெளியீட்டுக்கு தயாராகும் பரத்தின் ‘பொட்டு’

In சினிமா
Updated: 11:57 GMT, Mar 27, 2017 | Published: 11:57 GMT, Mar 27, 2017 |
0 Comments
1450
icon_com
This post was written by : Shailu
pottu

பரத், நமீதா நடிப்பில் திகில் படமாக உருவாகியுள்ள படம் ‘பொட்டு’. இப்படத்தை வடிவுடையான்இயக்கியிருக்கிறார். ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் இசையமைப்பாளர் அம்ரீஷ் இப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார்.

முழுக்க முழுக்க திகில் படமாக உருவாகியிருக்கும இந்த படத்தில் பரத் இப்படத்தில் பெண் வேடத்திலும் நடித்துள்ளார்.இப்படத்தை ஷாலோம் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஜான் மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு மொத்தம் 90 நாட்களே நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.அத்தோடு, தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் வெளியிடப்போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

அதன்படி, தமிழில் பொட்டு என்ற பெயரிலும், தெலுங்கில் பொட்டூ என்ற பெயரிலும், இந்தியில் பிந்தி என்ற பெயரிலும் இப்படம் வெளியாகவிருக்கிறது. தற்போது அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg