Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்க கடற்படை கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது

In இலங்கை
Published: 17:28 GMT, Mar 27, 2017 |
1 Comment
1689
icon_com
This post was written by : Vithushagan
FotorCreated-316

அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான “கொம்ஸ்டொக்” எனும் பெயருடைய கப்பலொன்று, பயிற்சி நடவடிக்கைகளுக்காக இன்று (திங்கட்கிழமை) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்தக் கப்பல் இலங்கை கடப்படையின் சம்பிரதாயங்களுடன் வரவேற்கப்பட்டுள்ளதாக துறைமுக கடற்படைப் பிரிவு அறிவித்துள்ளது.

இந்த வரவேற்பின் பின்னர், அமெரிக்க கப்பலின் கட்டளைத் தளபதி கொமாண்டர் புருடளி கொலட்டிக்கும் மேற்கு கடற்படைப் பிரிவுக்குப் பொறுப்பான கட்டளைத் தளபதி ரியல் அட்மிரால் நிராஜ் ஆட்டிகலவுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்க கடற்படை அதிகாரிகள் நான்கு நாட்களுக்கு நாட்டில் தங்கியிருப்பார்கள் என அப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg
  1. jacob Soosaimuthu