Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெள்ளைவானில் வந்தவர்களால் பணம் கொள்ளை! – தலவாக்கலையில் சம்பவம்

In இலங்கை
Published: 05:01 GMT, Mar 28, 2017 |
0 Comments
1223
icon_com
This post was written by : Ravivarman

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பூண்டுலோயா பிரதான வீதியில் வெள்ளை வானில் வந்தவர்கள், பால் லொறி ஒன்றினை வழிமறித்து சாரதியை தாக்கி விட்டு பணத்தினைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

தலவாக்கலை பால் நிலையத்திலிருந்து நேற்றுமாலை (திங்கட்கிழமை) வீட்டுக்கு பணத்தினை எடுத்துச் சென்று கொண்டிருந்த வேளையில், டொல்பின் ரக வெள்ளை வானில் வந்த சிலரால் ஆறு லட்சத்து பதினெட்டாயிரம் ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி சம்பவத்தில் காயமடைந்த சாரதியான ஆர்.சின்னையா என்பவர், லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெள்ளை வானில் வந்தவர்கள் அரச அதிகாரிகள் போல் உடை அணிந்திருந்ததாகவும், சுமார் ஐந்து பேர் வரை வானில் இருந்தாகவும் சாரதி தெரிவித்துள்ளார். மேலும் சாரதியின் கையை கூரிய ஆயுதத்தினால் தாக்கி காயப்படுத்தியதுடன், பின் தலையில் கட்டையொன்றினால் தாக்கி லொறியினையும் பணத்தினை எடுத்து சென்றதாக பொலிஸ் விசாரணையின் போது சாரதி  குறிப்பிட்டுள்ளார்.

சம்பவ இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்தில் கைவிடப்பட்ட நிலையில் லொறி மீட்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

DSC01702 DSC01719

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg