Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மனநல சுகாதார பாதுகாப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

In இந்தியா
Updated: 07:38 GMT, Mar 28, 2017 | Published: 06:10 GMT, Mar 28, 2017 |
0 Comments
1116
icon_com
This post was written by : Elakkiya
296DC71F-7D8E-4607-8C2B-12D631355771_L_styvpf

மத்திய அரசினால் முன்வைக்கப்பட்ட மனநல சுகாதார பாதுகாப்பு சட்டமூலம், குரல் வாக்கெடுப்பு மூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலம் நேற்று (திங்கட்கிழமை) நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி நட்டா முன்னிலையில் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடுமையான மன அழுத்தம் காரணமாக எவராவது தற்கொலை முயற்சியில் ஈடுபட்டால் அவர்களுக்கு இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் சிறைத்தண்டனையோ அல்லது அபராதமோ விதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் இச் சட்டமூலம் அமைகின்றது.

அத்துடன், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் சிறந்த சிகிச்சை வழங்கவும் வழிசெய்கின்றது.

இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா விளக்கமளிக்கையில், “கடந்த 1987ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மனநல சுகாதார பாதுகாப்பு சட்டம், சிகிச்சை நிறுவனத்தை நோக்கமாக கொண்டிருந்தது. தற்போதைய புதிய சட்டமூலம் மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளை மையமாக கொண்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மனநல சுகாதார பாதுகாப்பு சட்டமூலம் கடந்த ஆண்டு நாடாளுமன்றின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு கடந்த ஓகஸ்ட் மாதம் டெல்லி மேல்சபையில் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg