Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சாதாரண தரப் பரீட்சையில் யாழ். மாணவன் சாதனை: தமிழ்மொழி மூலம் முதலாமிடம்

In இலங்கை
Published: 05:28 GMT, Mar 28, 2017 |
0 Comments
2563
icon_com
This post was written by : Ravivarman

நடைபெற்று முடிந்த க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் யாழ்.இந்துக் கல்லூரி மாணவனான அ.அபிநந்தன், 9 பாடங்களில் சிறப்பு சித்தி பெற்று, யாழ்.மாவட்டத்தில் முதலாம் இடத்தையும், தேசிய மட்டத்தில் தமிழ் மொழிமூலம் முதலாம் இடத்தினையும், தேசியமட்டத்தில் ஐந்தாம் இடத்தினையும் பெற்றுச் சாதனை படைத்துள்ளார்.

2016ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) வெளியான நிலையில் குறித்த மாணவன் இந்த பெறுபேற்றை பெற்றுள்ளார். இவ்வெற்றி குறித்து கருத்துத் தெரிவித்த மாணவன் அபிநந்தன்,

“எனது வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றிகள். எனது தாய் ஒரு ஆசிரியர் என்பதோடு, தந்தை மருந்தாளராக கடமையாற்றுகிறார். எனது பெற்றோர் மற்றும் சித்தியின் ஊக்கமளிப்பினால்தான் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் நான் சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளேன்.

எனக்கு கற்பித்த எனது பாடசாலையான இந்துக்கல்லூரி அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நான் உயிரியல் விஞ்ஞான துறையில் தொடர்ந்து கல்வி கற்பதற்கு விரும்புகிறேன். அது முடியாது போனால் நோய்கள் பற்றிய ஆய்வுத்துறையில் எனது கல்வியை கற்க விரும்புகிறேன்” என மேலும் தெரிவித்தார்.

IMG_0584

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg