Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மக்களுக்கு எதிரான எந்த திட்டத்தையும் மத்திய அரசு செயற்படுத்த முயற்சிக்காது: பொன்.ராதாகிருஷ்ணன்

In இந்தியா
Updated: 05:57 GMT, Mar 28, 2017 | Published: 05:21 GMT, Mar 28, 2017 |
0 Comments
1153
icon_com
This post was written by : Shailu
Radhakrishnan

மக்களுக்கு எதிரான எந்த திட்டத்தையும் மத்திய அரசு செயற்படுத்த முயற்சிக்காது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நெடுவாசல் உள்ளிட்ட 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை செயற்படுத்துவதற்கான ஒப்பந்தங்கள் டெல்லியில் நேற்று (திங்கட்கிழமை) கையெழுத்தாகிய நிலையில், இது குறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் டெல்லியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “நெடுவாசல் பகுதி மக்களுக்கும், புதுக்கோட்டை மாவட்டத்துக்கும் தமிழகத்திற்கும் எதிரான எந்த திட்டத்தையும் செயற்படுத்த மத்திய அரசு முயற்சிக்காது.

இந்தத் திட்டம் குறித்து ஏற்கனவே நெடுவாசல் கிராம மக்களிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தினால் விவசாய நிலங்கள் எந்த வகையிலும் பாதிப்படையாது.

நெடுவாசல் போராட்டக் குழுவினர் மத்திய பெற்றோலிய துறை அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டு, அனைத்து விபரங்களும் எடுத்துரைக்கப்பட்டடுள்ள நிலையில், மக்களிடம் ஆலோசிக்காமல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்ற உறுதியும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இப்போது ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பது முதற்கட்ட நடவடிக்கைதான். இதற்கு பிறகு மாநில அரசிடம் இருந்து சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாடு தொடர்பான அனுமதியை பெற வேண்டும். மக்களின் அனைத்து சந்தேகங்களையும் தீர்த்து வைத்த பின்னர்தான் இந்த திட்டம் செயற்படுத்தப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg