Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘தர்மசாலா போட்டியே நான் பங்குபற்றியதில் தொடர்களில் சிறந்தது’ – ஸ்மித்

In கிாிக்கட்
Updated: 10:06 GMT, Mar 28, 2017 | Published: 09:51 GMT, Mar 28, 2017 |
0 Comments
1148
icon_com
This post was written by : Risha
Steven-Smith-HD-Wallpapers

தர்மசாலாவில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரானது, தன் பங்குபற்றிய சிறந்த டெஸ்ட் தொடர்களில் ஒன்றாகும் என அவுஸ்ரேலிய அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலியாவை 2-1 என்று வீழ்த்தி, இந்திய அணி தொடரைக் கைப்பற்றிய பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து தெரிவித்த ஸ்மித், “தனது அபாரமான விளையாட்டை வெளிப்படுத்திய இந்திய அணிக்கு பாராட்டுக்கள். குறிப்பாக உள்நாட்டில் அவர்களது ஆட்டம் பாராட்டுக்குரியது.

இந்திய அணியை எதிர்கொள்வது கடினமாக இருந்த போதிலும், அவுஸ்ரேலிய அணி வீரர்கள் இந்திய வீரர்களுக்கு கடும் சவால்களை ஏற்படுத்தியிருந்தனர். அந்தவகையில் எமது வீரர்கள் பாராட்டத்தக்கவர்கள். அவர்களை எண்ணி நான் பெருமையடைகிறேன்.

இந்திய அணி எம்மை 4-0 என வைட்வொஷ் செய்யும் என விமர்சனங்கள் எழுந்த போதிலும் நாங்கள் சரிசமமாக ஆடியதில் மகிழ்ச்சி” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg