Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கீத் நொயாரை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட வான் கண்டுபிடிப்பு

In இலங்கை
Updated: 06:02 GMT, Mar 29, 2017 | Published: 06:02 GMT, Mar 29, 2017 |
0 Comments
1095
icon_com
This post was written by : Varshini
Keith-Noyahr

ஊடகவியலாளர் கீத் நொயாரை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வான் ஒன்றை குற்றப்புலனாய்வு பிரிவினர் பிலியந்தலை பகுதியிலிருந்து இன்று (புதன்கிழமை) மீட்டுள்ளனர்.

கீத் நொயார் கடத்தப்பட்டமை தொடர்பில் கடந்த பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட ராணுவ மேஜரான புலவத்தவுடன் நெருங்கிய தொடர்புடைய பெண் ஒருவரின் வீட்டிலிருந்தே குறித்த வான் கைப்பற்றப்பட்டுள்ளது.

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்தவின் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுக்கு இவ் வாகனம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வந்த ஊடகவியலாளர் கீத் நொயார் கடந்த 2008ஆம் ஆண்டு கொழும்பில் கடத்தப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டிருந்தார். சம்பவம் தொடர்பில் ராணுவத்தைச் சேர்ந்த ஐவர் இதுவரை கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg