Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவுஸ்ரேலிய வீரர்களை நண்பர்களாக கருதுவது கடினம்: கோஹ்லி

In விளையாட்டு
Updated: 06:51 GMT, Mar 29, 2017 | Published: 06:35 GMT, Mar 29, 2017 |
0 Comments
1172
This post was written by : Risha

அவுஸ்ரேலியாவுடனான டெஸ்ட் தொடர் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், அவுஸ்ரேலிய வீரர்களை நான் எனது நண்பர்களாக எண்ணியிருந்தேன். ஆனால் தற்போது அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டுள்ளேன். இனி அவர்களை நான் நண்பர்களாக கருதுவது கடினம் என இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

இந்தத் தொடரில் அவுஸ்ரேலிய அணியினர் நடந்துகொண்ட விதம் குறித்து விராட் கோஹ்லி கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்த கோஹ்லி, “தொடருக்கு முன்பாக, அவுஸ்ரேலிய வீரர்கள் எனக்கு களத்திற்கு வெளியே நல்ல நண்பர்கள். ஆனால் தற்போது அந்த எண்ணம் இல்லை. நான் எனது எண்ணத்தை மாற்றிக் கொண்டேன் என்பது உறுதி” எனக் கூறியுள்ளார். விராட் கோஹ்லியின் இக் கருத்து, அவுஸ்ரேலிய அணியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒருசில அவுஸ்ரேலிய ஊடகங்கள் விராட் கோஹ்லியை ட்ரம்புடன் ஒப்பிட்டு கேலி செய்ததுடன், இவர் அராஜகவாதி என்றும் வர்ணித்தது. அத்துடன், கோஹ்லியின் தோள்பட்டைக் காயத்தை அவுஸ்ரேலிய வீரர்கள் கேலி செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg